Skip to main content

மக்காச்சோளம் பொருளடக்கம் உடற்தோற்றம் மற்றும் உடற்செயலியல் அசாதாரண மலர்கள் மரபியல் மரபணு மாற்றம் தீவன மக்காச்சோளம் ஊட்டச்சத்து உற்பத்தி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வழிசெலுத்தல் பட்டிLink to USDA Database entryUSDA Nutrient databaseThe Evolution of Cornமக்காச்சோளம்மக்காச்சோளம்"Ecology of Exotic Races of Maize. I. Leaf Number and Tillering of 16 Races Under Four Temperatures and Two Photoperiods1"10.2135/cropsci1972.0011183X001200060045x"Jala Maize is Small"மக்காச்சோளம்மக்காச்சோளம்10.2307/2446611"What is an ear of corn?"ISAAA Brief 43-2011National Agricultural Statistics Service (NASS), Agricultural Statistics Board, US Department of Agriculture, Acreage report for 2010ISAAA Biotech Maize Update 2011மூல முகவரியிலிருந்துISAAA Pocket K No. 2: Plant Products of Biotechnology, 2011"தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்!"தீவன உற்பத்தி: தானிய வகை தீவனப் பயிர்கள்International Grains Council Market Report 28 November 2013Maize production in 2014, Crops/Regions/Production Quantity from pick listsசோளத்தில் இருந்து எத்தனால் - சீன வானொலிக் கட்டுரைMaize Genetics and Genomics DatabaseMaize Genetics Cooperation Stock Center

தானியங்கள்


தானியம்பயிர்ஐக்கிய அமெரிக்காவில்இந்தியாசீனாபிரேசில்பிரான்ஸ்இந்தோனேசியாதென்னாப்பிரிக்காசோளப்பொரிநடு அமெரிக்காவில்அமெரிக்காக் கண்டம்ஐரோப்பியர்களுக்குபயிர்மில்லியன்தொன்கள்கலப்பினவிவசாயிகள்மீட்டர்தண்டுகள்மூங்கிலின்கூலப்பட்டுகூலப்பட்டுகூலப்பட்டுஅர்ஜென்டினாஆஸ்திரேலியாபிரேசில்கனடாசீனாகொலம்பியாஎல் சால்வடோர்ஐரோப்பிய ஒன்றியம்ஹொண்டுராஸ்ஜப்பான்கொரியாமலேசியாமெக்ஸிகோநியூசிலாந்துபிலிப்பைன்ஸ்சிங்கப்பூர்தென்னாபிரிக்காதாய்வான்தாய்லாந்துஅமெரிக்காஆஸ்திரேலியாசிலிசெக் குடியரசுஎகிப்துகொரியாமலேசியாநெதர்லாந்துதைவான்அமெரிக்காஉருகுவே












மக்காச்சோளம்




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search

























மக்காச்சோளம்

Zea mays - Köhler–s Medizinal-Pflanzen-283.jpg
மக்காச்சோளம்

உயிரியல் வகைப்பாடு
திணை:

தாவரம்
தரப்படுத்தப்படாத:

பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:

ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத:

Commelinids
வரிசை:

Poales
குடும்பம்:

Poaceae
துணைக்குடும்பம்:

Panicoideae
சிற்றினம்:

Andropogoneae
பேரினம்:

Zea
இனம்:

Z. mays
துணையினம்:

Z. mays subsp. mays

மூவுறுப்புப் பெயர்

Zea mays subsp. mays
L.




Zea mays "Ottofile giallo Tortonese”


மக்காச்சோளம் (இலங்கையில் 'சோளம்', அறிவியல் பெயர்/தாவரவியல் பெயர் - Zea mays) உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம். உலகில் அதிகம் பயிரிடப்படும் பயிர் இதுவே ஆகும். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலின் தென் பகுதியில் வாழ்ந்த அமெரிக்க முதற்குடிமக்கள் (பூர்வகுடிகள்) முதன் முதலாக உணவுக்காக மக்காச்சோளத்தைப் பயிரிடத் தொடங்கினர். [1] உலகின் சோள உற்பத்தியில் பாதியளவு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதுதவிர இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றைப் பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர். சில வகை மக்காச்சோள வகைகளி்ல் இருந்து சோள எத்தனால்,கால்நடைத் தீவனங்கள் மற்றும் மற்ற மக்காச்சோளத் தயாரிப்புகளான சோள மாவுசத்து (corn starch) மற்றும் சோளச் சாறு (corn syrup) ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் குழி மக்காச்சோளம் (dent corn), சோளப்பொறி மக்காச்சோளம், மாவு மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம் உள்ளிட்ட ஆறு முக்கிய மக்காச்சோள வகைகள் உள்ளன. [2]


இது முதலில் நடு அமெரிக்காவில் பயிரிடப்பட்டு பின்னர் அமெரிக்காக் கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. அமெரிக்காவில் அதிகம் பயிரிடப்படும் பயிர் மக்காச்சோளம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 270 மில்லியன் தொன்கள் எடைகொண்ட மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. பொதுவான மக்காச்சோளப் பயிரைக் காட்டிலும், கலப்பின மக்காச்சோளப் பயிர்கள் அதிக விளைவைத் தருவதால் விவசாயிகள் கலப்பினங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். சில மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளர்கின்றன. எனினும் பெரும்பாலான வணிக அடிப்படையில் பயிராகும் மக்காச்சோளத் தாவரங்கள் 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளர்கின்றன. இனிப்பு மக்காச்சோள வகைகள் பிற மக்காச்சோள வகைகளிலும் குட்டையானவை.




பொருளடக்கம்





  • 1 உடற்தோற்றம் மற்றும் உடற்செயலியல்


  • 2 அசாதாரண மலர்கள்


  • 3 மரபியல்


  • 4 மரபணு மாற்றம்


  • 5 தீவன மக்காச்சோளம்


  • 6 ஊட்டச்சத்து


  • 7 உற்பத்தி


  • 8 மேற்கோள்கள்


  • 9 வெளி இணைப்புகள்




உடற்தோற்றம் மற்றும் உடற்செயலியல்


மக்காச்கோளமானது 3 மீட்டர் (10 அடி) நீளத்தில் வளர்கிறது.[3] மக்காச்சோளத் தண்டுகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது மூங்கிலின் வடிவத்தை ஒத்தது. இவற்றில் பொதுவாக 20 கணுவிடைப்பகுதிகள் காணப்படும். [4] இவை 18 செ.மீ (7.1 அங்குலம்) நீளம் கொண்டவையாக உள்ளன. மக்காச்சோளம் தனித்துவமான வடிவம் கொண்டதாக வளர்கின்றது. கீழ்ப்பகுதி இலைகள் 50-100 சதமமீட்டர் (சமீ) நீளமும், 5-10 சமீ அகலமும் கொண்டவை. தண்டுப் பகுதி நிமிர்ந்த நிலையில் 2-3 மீட்டர்கள் வரை வளர்கின்றது.


மக்காச்சோளக் கதிரானது சில இலைகளுக்கு மேல் தாவரத்தின் மத்திய பகுதியில் இலையடி மடலுக்கும் தண்டிற்கும் இடையே தோன்றுகிறது. இது தோன்றியதிலிருந்து ஒவ்வொரு நாளும் 3 மில்லி மீட்டர் (0.12 அங்குலம்) நீளம் நீட்சியடைகிறது. [5] இக்கதிரானது முற்றிய நிலையில் 18 சென்டி மீட்டர் நீளத்தை அடைகிறது. சில சிற்றினங்களில் கோளக்கதிரானது 60 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இவை மக்காச்சோளத் தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு ஆகும். உண்மையில் இது பல பெண் மலர்கள் நெருக்கமாக அமைந்த மஞ்சரி ஆகும்.நெருக்கமாக இணைந்த அனைத்து மலர்களின் பூத்தளம் கதிர் முற்றிய நிலையில் சோளச்சக்கையாக (உமி) மாறுகிறது. இக்கதிருடன் கூடுதலாக சில கதிர்கள் தோன்றுகின்றன. சில நாட்களான பிஞ்சு நிலையில் இளஞ்சோளக்கதிர் (Baby Corn) என்ற பெயரில் ஆசிய சமையல் பாணியில் முக்கிய சமையற் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.


தண்டின் நுனியில் பூந்துக் குஞ்சம் தோன்றுகிறது. இது ஆண் மலர்கள் அடங்கிய மஞ்சரியாகும். ஆண் மலர்களில் உள்ள மகரந்தபை முற்றியவுடன் வெடித்து மகரந்தத்தூளினை வெளியேற்றுகின்றன. மக்காச்சோளத் தாவரத்தில் காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. மகரந்தப்பையில் இருந்து வெளியேறும் மகரந்தத்தூள் கீழே அமைந்திருக்கும் பெண் மஞ்சரியான சோளக்கதிரில் உள்ள பெண் மலர்களின் சூல் முடியை அடைகின்றன. அங்கு சூலுடன் கருவுறுதல் நடைபெற்று பிக் சூல்கள் விதையாக மாறுகின்றன. கோளக்கதிரில் குறு இலைகளுக்கு வெளியே சூல் தண்டுகள் நீளமாக வெளியே மெல்லிய முடி போன்ற வளரிகள் காணப்படுகின்றன. இது கூலப்பட்டு என அழைக்கப்படுகிறது. கூலப்பட்டு என்பது சோளக்கதிர் நுனியிலிருந்து கற்றையாக அல்லது குஞ்சம் போன்று வெளித்தள்ளியிருக்கும் பளப்பளப்பான, பலவீனமான பட்டுப் போன்ற இழை அமைப்பாகும். சோளக்கதிர் மாற்றுரு அடைந்த இலைகளால் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நார் போன்ற அமைப்பும் ஒரு சூலகத்துடன் இணைந்த நீண்ட சூல்முடியாகும்.


சோள விதையானது உலர் வெடியா கனி வகையாகும். சோள மணிகளானது பட்டாணி அளவில் 2.5 செ.மீ (1 அங்குலம்) நீளத்தில் உள்ளன. [6] மேலும் சீரான வரிசையில் சோள மணிகள் அமைந்திருக்கின்றன.



அசாதாரண மலர்கள்


சில வேளைகளில் மக்காச்சோள தாவரங்களில் சடுதி மாற்றம் தென்படுகின்றன. அதாவது பெண் மலர்கள் தாவரத்தின் உச்சியில் ஆண் மலர் அமைந்திருக்கும் குஞ்சத்துடன் சேர்ந்து உருவாகிறது. இத்தகைய திடீர் மாற்றங்கள் ts4 மற்றும் Ts6 ஆகிய ரகங்களில் அதிகம் காணப்படுகின்றன.[7] இதன் காரணமாக ஆண் மலர் மற்றும் பெண் மலர்கள் இணைந்து இருபால் மஞ்சரியாக உருமாறி காட்சியளிக்கின்றன. [8]



மரபியல்




தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாட்டு இன மக்காச்சோள வகைகளை இனப்பெருக்கம் செய்யும் போது, மரபியல் வேறுபாடு


மக்காச்சோளத்தின் பல வடிவங்கள் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் மக்காச்சோளத்தில் இருக்கும் மாவுச்சத்தின் அளவைப் பொறுத்து துணை இரககங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.


  • மாவு மக்காச்சோளம்: சியா மேஸ் வர். அமிலேசியா

  • சோளப்பொறி மக்காச்சோளம் (Popcorn): சியா மேஸ் வர். எவர்டா

  • குழி மக்காச்சோளம் (Dent corn) : சியா மேஸ் வர்.இன்டென்டேட்டா

  • கடின மக்காச்சோளம் (Flint corn): சியா மேஸ் வர். இன்டுரேட்டா

  • இனிப்பு மக்காச்சோளம் (Sweet corn): சியா மேஸ் வர். சச்சராட்டா மற்றும் சியா மேஸ் வர். ருகோசா

  • மெழுகு மக்காச்சோளம் (Waxy corn): சியா மேஸ் வர். செரட்டினா

  • அமைலோ மக்காச்சோளம் (Amylomaize): சியா மேஸ்

  • உறைய மக்காச்சோளம் (Pod corn): சியா மேஸ் வர். டியூனிகேட்டா

  • வரி மக்காச்சோளம் Striped maize: சியா மேஸ் வர். ஜப்போனிக்கோ


மரபணு மாற்றம்


25 மரபணு மாற்றப்பயிற்களில் ஒன்றான மரபணு மாற்ற மக்காச்சோளப் பயிரும் 2011 ஆம் ஆண்டு வனிக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்தது. [9] 1997 முதல் ஐக்கிய மாகானம் மற்றும் கனடாவில் இவை பயிரிடப்பட்டு வந்திருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு வாக்கில் மரபணு மாற்றம் செய்யப்ப்ட மக்காச்சோளத்தின் அளவு 86 சதவீதம் ஆகும். [10] 2011 ஆம் ஆண்டைய புள்ளிவிபரப்படி உலக அளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் 32% மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளம் ஆகும். [11] 2011 ஆண்டு களைக்கொள்ளி சகிப்பு மக்காச்சோள ரகங்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, எல் சால்வடோர் , ஐரோப்பிய ஒன்றியம், ஹொண்டுராஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்ஸிகோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், உருசிய கூட்டமைப்பு, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, தாய்வான், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டன. மேலும் பூச்சி எதிர்ப்பு மக்காச்சோள ரகங்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சிலி, சீனா, கொலம்பியா, செக் குடியரசு, எகிப்து, ஐரோப்பிய ஒன்றியம், ஹோண்டுராஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ருமேனியா, உருசியக் கூட்டமைப்பு, தென்னாபிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, தைவான் , அமெரிக்கா, மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலும் பயிரிடப்பட்டன. [12]



தீவன மக்காச்சோளம்


கால்நடைகளுக்கான தீவனங்களில் முதலாவதாகக் கருதப்படுவது தீவன மக்காச்சோளம் ஆகும். இதை, இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம்[13]. ஆப்ரிக்க நெட்டை, விஜய் கம்போசிட், மோட்டி கம்போசிட், கங்கா-5 மற்றும் ஜவகர் போன்றவை தீவன மக்காச்சோள ரகங்களாகும்[14]



ஊட்டச்சத்து


இனிப்புச்சோளம், மஞ்சள் பகுதி, பச்சையானது
(விதைகள் மட்டும்)
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 90 kcal   360 kJ



































மாப்பொருள்    
18.7 g
- மாப்பொருள்  5.7 g
- சர்க்கரை  6.26 g
- நார்ப்பொருள் (உணவு)  2 g  
கொழுப்பு1.35 g
புரதம் 3.27 g
நீர்75.96 g

உயிர்ச்சத்து ஏ  9 μg
1%

தயமின்  0.155 mg  
12%

ரிபோஃபிளாவின்  0.055 mg  
4%

நியாசின்  1.77 mg  
12%

பான்டோதெனிக் அமிலம்  0.717 mg 
14%

உயிர்ச்சத்து பி6  0.093 mg
7%

இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  42 μg 
11%

உயிர்ச்சத்து சி  6.8 mg
11%

இரும்பு  0.52 mg
4%

மக்னீசியம்  37 mg
10% 

பாசுபரசு  89 mg
13%

பொட்டாசியம்  270 mg  
6%

துத்தநாகம்  0.46 mg
5%
Link to USDA Database entry
One ear of medium size (6-3/4" to 7-1/2" long)
maize has 90 grams of seeds
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database


உற்பத்தி


மக்காச்சோளமானது உலகளவில் பரவலாகப் பயிரிடப்படும் ஒரு தானியப்பயிராகும். ஒவ்வொரு வருடமும் மற்ற தானியங்களை விட மக்காச்சோளமே அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. [15] 2014 ல் உலக அளவில் 1.04 பில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டடியலில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 35 சதவீதம் ஆகும். மொத்த உலக உற்பத்தியில் சீனா 21 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. [16]




















மக்காச்சோள உற்பத்தி - 2014[17]
நாடுகள்
உற்பத்தி (மில்லியன் டன்கள்)


 ஐக்கிய அமெரிக்கா
361.1

 சீனா
215.6

 பிரேசில்
79.9

 அர்கெந்தீனா
33.1

 உக்ரைன்
28.5

 இந்தியா
23.7

 மெக்சிக்கோ
23.3

 உலகம்

1037.8


மேற்கோள்கள்




  1. "The Evolution of Corn". University of Utah HEALTH SCIENCES. பார்த்த நாள் 2 January 2016.


  2. Linda Campbell Franklin, "Corn," in Andrew F. Smith (ed.), The Oxford Encyclopedia of Food and Drink in America. 2nd ed. Oxford: Oxford University Press, 2013 (pp. 551–558), p. 553.


  3. Wellhausen, Edwin John (1952). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] மக்காச்சோளம் Races of Maize in Mexico]. கூகுள் புத்தகங்களில் மக்காச்சோளம். 


  4. Stevenson, J. C.; Goodman, M. M. (1972). "Ecology of Exotic Races of Maize. I. Leaf Number and Tillering of 16 Races Under Four Temperatures and Two Photoperiods1". Crop Science 12 (6): 864. doi:10.2135/cropsci1972.0011183X001200060045x. https://www.crops.org/publications/cs/abstracts/12/6/CS0120060864?access=0&view=pdf. 


  5. Karl, J. R. (2007). "Jala Maize is Small". Maize Genetics MNL 89: e3. http://www.agron.missouri.edu/mnl/89/pdf/03karl.pdf. 


  6. Grobman, Alexander (1961). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] மக்காச்சோளம் Races of Maize in Peru]. கூகுள் புத்தகங்களில் மக்காச்சோளம். 


  7. Irisch, Erin E. (1997). "CLASS II TASSEL SEED MUTATIONS PROVIDE EVIDENCE FOR MULTIPLE TYPES OF INFLORESCENCE MERISTEMS IN MAIZE (POACEAE)". American Journal of Botany 84 (11). doi:10.2307/2446611. 


  8. Montgomery E (1906). "What is an ear of corn?". Popular Science Monthly 68 (January). https://en.wikisource.org/wiki/Popular_Science_Monthly/Volume_68/January_1906/What_Is_an_Ear_of_Corn%3F. 


  9. ISAAA Brief 43-2011: Executive Summary, retrieved September 9, 2012


  10. "National Agricultural Statistics Service (NASS), Agricultural Statistics Board, US Department of Agriculture, Acreage report for 2010".


  11. "ISAAA Biotech Maize Update 2011". மூல முகவரியிலிருந்து May 24, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் October 6, 2014.


  12. "ISAAA Pocket K No. 2: Plant Products of Biotechnology, 2011". பார்த்த நாள் October 6, 2014.


  13. "தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்!". தினமணி. 18 பிப்ரவரி 2016. http://www.dinamani.com/agriculture/2016/02/18/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/article3282934.ece. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. 


  14. "தீவன உற்பத்தி: தானிய வகை தீவனப் பயிர்கள்". தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். பார்த்த நாள் 27 பெப்ரவரி 2016.


  15. International Grains Council (international organization) (2013). "International Grains Council Market Report 28 November 2013".


  16. [1]


  17. "Maize production in 2014, Crops/Regions/Production Quantity from pick lists". United Nations, Food and Agriculture Organization, Statistics Division (FAOSTAT) (2014). பார்த்த நாள் 4 April 2017.




வெளி இணைப்புகள்





  • சோளத்தில் இருந்து எத்தனால் - சீன வானொலிக் கட்டுரை (தமிழில்)

  • Maize Genetics and Genomics Database

  • Maize Genetics Cooperation Stock Center




"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்காச்சோளம்&oldid=2668581" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி





























(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.416","walltime":"0.562","ppvisitednodes":"value":10335,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":83309,"limit":2097152,"templateargumentsize":"value":27222,"limit":2097152,"expansiondepth":"value":15,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":23735,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 462.441 1 -total"," 34.61% 160.054 1 வார்ப்புரு:Taxobox"," 30.57% 141.386 1 வார்ப்புரு:Taxobox/core"," 27.78% 128.466 1 வார்ப்புரு:Reflist"," 14.42% 66.691 7 வார்ப்புரு:Flag"," 14.23% 65.806 7 வார்ப்புரு:Citation/core"," 12.99% 60.071 11 வார்ப்புரு:Taxonomy"," 10.20% 47.175 22 வார்ப்புரு:Anglicise_rank"," 8.92% 41.269 2 வார்ப்புரு:Cite_book"," 7.66% 35.402 4 வார்ப்புரு:Cite_journal"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.007","limit":"10.000","limitreport-memusage":"value":708492,"limit":52428800,"cachereport":"origin":"mw1303","timestamp":"20190702081138","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0baeu0b95u0bcdu0b95u0bbeu0b9au0bcdu0b9au0bcbu0bb3u0baeu0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q11575","mainEntity":"http://www.wikidata.org/entity/Q11575","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2005-09-12T08:48:06Z","dateModified":"2019-03-04T05:56:36Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e3/Zea_mays_-_K%C3%B6hler%E2%80%93s_Medizinal-Pflanzen-283.jpg","headline":"u0ba4u0bbeu0bb5u0bb0 u0b87u0ba9u0baeu0bcd"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":149,"wgHostname":"mw1269"););

Popular posts from this blog

Canceling a color specificationRandomly assigning color to Graphics3D objects?Default color for Filling in Mathematica 9Coloring specific elements of sets with a prime modified order in an array plotHow to pick a color differing significantly from the colors already in a given color list?Detection of the text colorColor numbers based on their valueCan color schemes for use with ColorData include opacity specification?My dynamic color schemes

Invision Community Contents History See also References External links Navigation menuProprietaryinvisioncommunity.comIPS Community ForumsIPS Community Forumsthis blog entry"License Changes, IP.Board 3.4, and the Future""Interview -- Matt Mecham of Ibforums""CEO Invision Power Board, Matt Mecham Is a Liar, Thief!"IPB License Explanation 1.3, 1.3.1, 2.0, and 2.1ArchivedSecurity Fixes, Updates And Enhancements For IPB 1.3.1Archived"New Demo Accounts - Invision Power Services"the original"New Default Skin"the original"Invision Power Board 3.0.0 and Applications Released"the original"Archived copy"the original"Perpetual licenses being done away with""Release Notes - Invision Power Services""Introducing: IPS Community Suite 4!"Invision Community Release Notes

199年 目錄 大件事 到箇年出世嗰人 到箇年死嗰人 節慶、風俗習慣 導覽選單