அல்-உக்சுர் பொருளடக்கம் பொருளாதாரம் போக்குவரத்து இங்குள்ள சுற்றுலாத் தலங்கள் இணை நகரங்கள் வழிசெலுத்தல் பட்டி
எகிப்துதொல்லியற்களங்கள்பண்டைய நகரங்கள்
எகிப்துதலைநகரமும்மக்கட் தொகையைக்தீபைஅருங்காட்சியகம்பொருளாதாரம்வேளாண்மைத்கரும்புச் செய்கைஅல்-உக்சுர் அனைத்துலக வானூர்தி நிலையம்வானூர்தி நிலையம்பாலம்
அல்-உக்சுர்
Jump to navigation
Jump to search
அல்-உக்சுர் (ஆங்கில வழக்கு: லக்சர், Luxor) எகிப்து நாட்டிலுள்ள ஒரு நகரம். இது அந்நாட்டின் அல் உக்சூர் ஆட்சிப்பகுதியின் தலைநகரமும் ஆகும். இது தற்போது அண்ணளவாக 150,000 மக்கட் தொகையைக் கொண்டுள்ளது. இந்த நகரம், தீபை (Thebes) என்னும் பண்டைய எகிப்திய நகரம் இருந்த இடத்தில் அமைந்துள்ளதாலும், புகழ் பெற்ற பண்டைய எகிப்தியக் கோயில்கள் இந் நகர எல்லைகளுக்குள் உள்ளதாலும், இந்த நகரம் உலகின் சிறப்புமிக்க திறந்தவெளி அருங்காட்சியகம் எனக் குறிப்பிடப்படுவது உண்டு.
இதற்கு நேர் எதிரே, நைல் நதிக்கு அப்பால் மேற்குக் கரை நெக்ரோபோலிசில் அரசர்களின் பள்ளத்தாக்கு, அரசிகளின் பள்ளத்தாக்கு என்பவை உட்படப் பல கோயில்களும், சமாதிகளும் வேறு நினைவுச் சின்னங்களும் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்காணக்கான சுற்றுலாப் பயணிகள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் இவற்றைப் பார்ப்பதற்காக இங்கு வருகிறார்கள். இந் நகரத்தின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி, இச் சுற்றுலாத் துறையில் தங்கியுள்ளது.
பொருளடக்கம்
1 பொருளாதாரம்
2 போக்குவரத்து
3 இங்குள்ள சுற்றுலாத் தலங்கள்
4 இணை நகரங்கள்
பொருளாதாரம்
இந் நகரின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்டிருந்த போதும், பெருமளவு மக்கள் வேளாண்மைத் துறையிலும் ஈடுபட்டுள்ளனர். சிறப்பாகக் கரும்புச் செய்கை முக்கியமான ஒரு பொருளாதார நடவடிக்கையாக விளங்குகிறது.
போக்குவரத்து
இங்கே அல்-உக்சுர் அனைத்துலக வானூர்தி நிலையம் எனப்படும் வானூர்தி நிலையம் ஒன்று உண்டு. இது இந் நகரத்தை உலகின் பிற பகுதிகளோடு இணைக்க உதவுகிறது. முன்னர் நைலின் கிழக்குக் கரைக்கும் மேற்குக் கரைக்குமான போக்குவரத்துத் தொடர்பு படகுச் சேவைகளினூடாகவே நடைபெற்று வந்தது. அண்மையில், நகரில் இருந்து சிறிது தொலைவில் புதிய பாலம் ஒன்று இந் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சுற்றுலாத் தலங்கள்
- கிழக்குக் கரை
- அல்-உக்சுர் கோயில்
- கர்னக் கோயில்
- அல்-உக்சுர் அருங்காட்சியகம்
மம்மியாக்க அருங்காட்சியகம் (Mummification Museum)
- மேற்குக்கரை
அரசர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings)
அரசிகளின் பள்ளத்தாக்கு (Valley of the Queens)
மதீனத் ஹாபு (மூன்றாவது ராமேசஸின் நினைவுக் கோயில்)
ராமேசியம் (இரண்டாவது ராமேசஸின் நினைவுக் கோயில்)
தெர் ல்-பஹிர் ( ஹட்செப்சுட் கோவில் )- மெம்மெனின் இமலாய சிலைகள்
இணை நகரங்கள்
பால்டிமூர், ஐக்கிய அமெரிக்கா
பகுப்புகள்:
- எகிப்து
- தொல்லியற்களங்கள்
- பண்டைய நகரங்கள்
(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.100","walltime":"0.183","ppvisitednodes":"value":269,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":6108,"limit":2097152,"templateargumentsize":"value":643,"limit":2097152,"expansiondepth":"value":13,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":0,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 131.232 1 -total"," 56.73% 74.447 1 வார்ப்புரு:Unreferenced"," 53.87% 70.701 1 வார்ப்புரு:Ambox"," 30.50% 40.024 1 வார்ப்புரு:Wide_image"," 23.50% 30.837 1 வார்ப்புரு:Str_sub"," 12.58% 16.513 1 வார்ப்புரு:USA"," 10.62% 13.937 1 வார்ப்புரு:Flag"," 9.86% 12.938 1 வார்ப்புரு:Str_left"," 6.29% 8.259 1 வார்ப்புரு:Str_find"," 6.19% 8.127 1 வார்ப்புரு:நாட்டுத்_தகவல்_ஐக்கிய_அமெரிக்கா"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.020","limit":"10.000","limitreport-memusage":"value":790990,"limit":52428800,"cachereport":"origin":"mw1293","timestamp":"20190702081844","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b85u0bb2u0bcd-u0b89u0b95u0bcdu0b9au0bc1u0bb0u0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q130514","mainEntity":"http://www.wikidata.org/entity/Q130514","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2007-04-19T17:48:41Z","dateModified":"2018-03-05T22:16:00Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/5/50/Egypt.LuxorTemple.River.01.jpg"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":112,"wgHostname":"mw1275"););